Saturday, February 25, 2012

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில் கடும் வறட்சியால் 50 லட்சம் பேர் பட்டினி: நகரபகுதிக்கு சென்று பிச்சை எடுக்கும் அவலம்


ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில்
கடும் வறட்சியால் 50 லட்சம் பேர் பட்டினி: நகரபகுதிக்கு சென்று பிச்சை எடுக்கும் அவலம்
நைஜர்,
ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடு நைஜர். இங்கு அடிக்கடி வறட்சி ஏற்படுவதும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவதும் வாடிக்கையாக உள்ளது.   இப்போது மீண்டும் அங்கு கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக நைஜர் நாட்டில் அக்டோபர் மாதம் அறுவடை நடக்கும். கடந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததால் சரியான விளைச்சல் இல்லை. மேலும் வெட்டுக்கிளி தாக்குதலாலும் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
 எனவே மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. உணவு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் உணவு கிடைக்காமல். 50 லட்சம் பேர் பட்டினி கிடக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது 2 நாளைக்கு ஒரு தடவை தான் சாப்பிடுவதாக கூறுகின்றனர்.
 
 கிராம பகுதிகளில் உணவு கிடைக்காத மக்கள் நகரங்களுக்கு சென்று பிச்சை எடுத்து சாப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காமல் பல குழந்தைகள் நோயால் அவதிப்படுகின்றன. நிலைமை மோசமாக இருப்பதை அடுத்து ஐ.நா குழு ஒன்று அவசரமாக நைஜர் நாட்டுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறது.
 
உடனடியாக நிலைமையை சமாளிக்க ரூ 4 ஆயிரம் கோடி தேவை என்று ஐ.நா கூறியிருக்கிறது. எனவே சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. நைஜர் நாட்டில் கடந்த 10 ஆண்டில் கடும் பட்டினி ஏற்பட்டு இருப்பது இது 3-வது தடவையாகும்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets