Friday, March 22, 2013

சுதந்திர தனிநாடாக பாலஸ்தீனம் உருவாக வேண்டும் - அதிபர் ஒபாமா



மத்திய கிழக்கு நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் இஸ்ரேல் மட்டுமல்லாது பாலஸ்தீனிய தலைவர்களையும் சந்தித்தார்.
இச்சந்திப்பின் பின்னர் இஸ்ரேல் மக்கள் முன்பு பேசுகையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும். அதுதான் பல ஆண்டுகளாக நீடித்து வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தக் கூடியது என்றார்.
இந்த உரை மேற்குலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒபாமா மேலும் கூறுகையில், சுதந்திரத் தனி நாடாகப் பாலஸ்தீன் மலர்வதற்கு அமெரிக்கா தன்னை அர்ப்பணித்து செயற்படத் தயாராக உள்ளது எனவும் கூறினார். மேலும் பாலஸ்தீனீய அதிபர் மஹ்மௌட் அப்பாஸ் இனை ஒபாமா சந்தித்த பின் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது 'எவ்வாறு இஸ்ரேலியர்கள் தமது தாயகத்தில் தமக்கென சொந்த மாநிலத்தை உருவாக்கிக் கொண்டார்களோ அதே போல் பாலஸ்தீனர்களும் தமது சொந்த நிலத்தில் பூரண சுதந்திரத்துடன் வாழ உரிமையுடையவர்கள்' என்றார்.
இதேவேளை இஸ்ரேல் பாலஸ்தீன எல்லைப் பகுதியான வெஸ்ட் பேங்கில் நிகழும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர பரஸ்பரம் நிபந்தனைகளுடன் கூடிய அவசர தீரமானங்கள் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும் என இஸ்ரேல் மீது தான் அழுத்தம் பிரயோகிக்கவில்லை எனவும் ஒபாமா குறிப்பிடத் தவறவில்லை.
மேலும் இரு நாடுகளுக்குமான சமாதான முயற்சியில் மிகப் பெரும் தடைக் கல்லாக இருப்பது பாலஸ்தீனர்களின் நிலத்தில் இஸ்ரேல் கொண்டிருக்கும் உரிமைகளைப் பேசித் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் மற்றும் வெஸ்ட் பேங்க் ஆகிய இடங்களுக்கு அதிபர் ஒபாமா மேற்கொண்டிருந்த 3 நாள் சுற்றுப் பயணம் அவரது பதவிக்காலத்தில் மேற்கொண்ட முதலாவது பயணமாகும்.
Blogger Wordpress Gadgets