Monday, September 24, 2012

சீன ராணுவத்தில் முதல் விமானம் தாங்கி கப்பல்


சீனா ராணுவம் உலகில் வலிமையான ராணுவமாக இருந்தாலும், இதுவரை சீனாவிடம் விமானம் தாங்கி கப்பல் இல்லாமல் இருந்தது. அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவுக்கு ராணுவத்தை வளர்த்து வரும் சீனா இப்போது முதன் முதலாக ராணுவத்தில் விமானந்தாங்கி கப்பலை சேர்த்துள்ளது. 


இந்த கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானதாகும். ரஷியா 1991-ம் ஆண்டு உடைந்தபோது அந்த கப்பல் உக்ரைனுக்கு சொந்தமானது. 2002-ம் ஆண்டு அந்த கப்பலை சீனா விலைக்கு வாங்கி புதுப்பித்தது. 

சீனாவில் உள்ள டேலியன் கப்பல் கட்டும் துறையில் பல ஆண்டுகளாக புதுப்பிப்பு பணி நடந்து முடிந்து, இப்போது சீன கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 

கப்பலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பணிக்காக பயன்படுத்த போவதாக சீனா கூறியுள்ளது. ஆனால் சீனா சமீபகாலமாக பக்கத்து நாடுகளான ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்சுடன் கடற் நிலபரப்பு தொடர்பாக மோதல் போக்கை கடைப் பிடித்து வருகிறது. எனவே இந்த கடல் பகுதியில் கண்காணிப்பதற்காகவும் அந்த நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும் கப்பலை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கப்பல் 990 அடி நீளம் கொண்டதாகும். 36 விமானங்கள், 16 ஹெலிகாப்டர்களை இதில் நிறுத்தி வைக்கலாம். 3 ஆயிரம் வீரர்கள் கப்பலில் தங்கியிருக்கும் வசதி உள்ளது. ரஷியாவிடம் இந்த கப்பல் இருந்தபோது வர்யாக் என்று பெயரிடப்பட்டு இருந்தது. சீனா இதற்கு ஷிலேங் என்று பெயரிட்டு உள்ளது.

Monday, September 17, 2012

சவூதியில் பஸ்- லொறி மோதி தீப்பிடித்தது: இந்தியர்கள் உள்பட 35 பேர் பலி


துபாயின் ஜூபைல் மாகாணத்தில் இன்று பேருந்தும்,ஆயில் டேங்கர் லாரியும் நேருக்குநேர் மோதி தீப்பிடித்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 35 பேர் இறந்தனர்.


சவூதியில் கேரளாவைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான நாசல் அல் ஹாஜிரி என்ற நிறுவனம் உள்ளது. இங்கு இந்தியாநேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் சென்று வர கம்பெனி சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இன்று பணி முடிந்து தொழிலாளர்கள் அந்த பேருந்தில் வீடு திரும்பினர். ஜூபைல் நகருக்கு அருகில் சென்றபோது  அந்த பேருந்துஆயில் டேங்கர் லாரியில் மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்தன. பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் பலர் தீயில் கருகினர்.


இவர்களில் 10 இந்தியர்கள் உள்பட 35 பேர் உடல் கருகி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும்12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Monday, May 21, 2012

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, மற்றும் துபாய் ?வெளிநாட்டு வாழ்வு


இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை. 
 
எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில்

சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.

அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை

வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.

90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?
30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள்? இரண்டு குமரிகளைக் கட்டி கொடுத்தேன்,

பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை  கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு. 70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.

80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.

இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.

2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?
ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 2500 ரூபாய் சம்பளம்.

என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார். இப்போது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே கிடைக்கிறது. அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில் சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?
சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.

 


இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.


 


இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சம்பளம் 800


 


இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200 ரியால்


 



இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.

சம்பளம் 1000 ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.
இறுதியாக

இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இதுபோன்ற கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். அப்படி வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள். இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு குடும்பத்தை அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

Wednesday, April 11, 2012

சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம்: 5 மணிக்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை


சென்னை, ஏப். 11 -
 
சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சென்னையிலுள்ள சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம், மைலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
 
இந்த நிலநடுக்கம் மிதமான அளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலநடுக்கம் 20 வினாடிகள் நீடித்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த சென்னை வாசிகள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு சாலைகளில் குவிந்தனர்.
 
தலைமைச்செயலகம்,  உயர்நீதிமன்றம்  உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் இருந்தோர்  அனைவரும் உடனடியாக சாலையில் கூடினர். நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னை பகுதியில் உள்ள மொபைல் நெட்வொர்க்குகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து  இந்தோனேஷியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன

Monday, March 12, 2012

இனங்கான முடியாத டிசோடருள்ள ஆச்சரியமான மனிதர்! - (வீடியோ+ படங்கள் + விளக்கம்)



ஜோசப் காரே மெரிக், 1862 ஆம் ஆண்டு தொடக்கம் 1890 ஆம் ஆண்டுவரை வாழ்த ஒரு அபூர்வமனிதர்!
அவரைப்பற்றிய சில சுவார்ஷ்யமான தகவல்களையே இன்று தமிழ்குளோனில் பார்க்கப்போகிறீர்கள்.
 
இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பிறந்த மெரிக் பிறந்து சில வருடங்களிலேயே அசாதரண மனிதனாக உருவாகத்தொடங்கினார். அவரின் தோல் யானை போன்று தடிமனாகத்தொடங்கியதுடன் முடிச்சுக்களும் உருவாகத்தொடங்கியது. மேலும் மருத்துவ உலகிற்கு சவால் விடும் விதமாக அவரின் நெற்றியில் பாரிய எலும்பு வளரத்ட்தொடங்கியதுடன் அவரின் கால்களும் வழமைக்கு மாறாக வித்தியாசமாக வளர்ந்தது.
அதன் விளைவு, நடக்கும் போது விழுந்த அவரின் இடுப்பெலும்பு நிரந்தரமாக வழைந்துபோனது.
 
இவ்வாறாக வழமைக்கு மாறாக வழர்ந்த மெரிக்கின் 11 வயதில் அவரின் தாயார் மரணமடைந்தார். அதன் பின் அவரின் தந்தை மறுமணம் செய்துகொள்ள, தந்தையாலும் புதிய தாயாலும் ஒதுக்கப்பட்டார். 12 வயதில் பாடசாலையால் விலக்கப்பட்ட அவர் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
 
வேலைகளைப்பெற்றுக்கொள்வதில் உருவத்தால் பல தடங்களை சந்தித்த அவர் இறுதியாக இலண்டன் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் தங்கவைக்கப்பட்டார். இவரின் வினோத உடலமைப்பை பற்றி அறிந்த லண்டன் மகாராணியின் கவணம் அவர் பக்கம் திரும்ப அவரின் வாழ்வு பொருளாதார ரீதியில் வளம்பெற்றது.
 
இறுதியாக படுக்கையில் இருக்கும் போதே கழுத்து முறிந்து இறந்துபோனார். இன்றுவரை இவரின் இவ் எதிர்பாரா உடலமைப்பிற்கான காரணமும் அவரின் இறப்பிற்கான சரியான காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தலையில் வழர்ந்த பாரிய எலும்புக்கட்டியால் ஏற்பட்ட பாரத்தின் காரணமாக, திடீரென தூக்கத்தால் விளித்தெழும் போது இறந்திருப்பார் என ஊகிக்கப்படுகிறது. ( இது போன்ற விசேட மனிதர்களை பற்றி அறிந்து கொள்ள கிங்டொம் ஆஃப் கீழக்கரையுடன் இணைந்திருங்கள். )

Sunday, March 11, 2012

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல் Read more about ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல்


அமெரிக்க சிப்பாய் ஒருவர் காந்தஹாரில் வீடுகளினுள் நுழைந்து 15 பேரைக் கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் இன்று ( 11.03.2012) காலையில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு வீடாகப் புகுந்து சராமாரியாக அந்த சிப்பாய் சுட்டதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் குழந்தைகள் ஆவர்.

படுகொலையை நடத்திய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தினை கண்டித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லியோன் பனெட்டா,  தான் வேதனையடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ மையத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. அமெரிக்க ராணுவத்திற்கும் ஆப்கான் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை நிலவுகிறது



football நகைச்சுவை (வீடியோ)





 Fooball matchஇல் நடந்த நகைச்சுவை சம்பவங்கள் :p

Blogger Wordpress Gadgets